Quick Checklist: What to Carry & What to Do
Please complete these simple steps before arriving at Ashok’s Dental Clinic.
1. Everyone Must Carry & Do
Regardless of your health condition, please ensure you complete these steps:
Bring your medicine list: Carry your current prescription sheets, tablet strips, or a clear list of your medications and dosages.
Important: Inform our team if you are taking any regular medications for pain, allergies, thyroid conditions, or any other long-term health condition.
Keep the phone number of your regular family physician or specialist handy.
2. Condition-Specific Instructions
If You Have High Blood Pressure (BP)
Take your regular BP medication on time. Do not skip it.
Check your blood pressure at home in the morning and note down the reading.
Avoid coffee, tea, or energy drinks for at least 3 hours before your appointment.
If You Have Diabetes
Eat your regular breakfast or lunch. Do not come on an empty stomach.
Check your blood sugar level on the morning of your appointment.
Bring your latest HbA1c report (3-month average blood sugar report).
If You Have a Heart Condition
Continue taking your heart medications and blood thinners unless your cardiologist has specifically instructed you to stop them.
Bring your cardiologist’s medical clearance letter for dental treatment.
3. Before Leaving Home
Please arrive 10–15 minutes before your appointment so our clinical team can check your vitals and prepare for a safe procedure.
என்ன செய்ய வேண்டும்? என்ன எடுத்து வர வேண்டும்?
அசோக் பல் மருத்துவமனைக்குக் கிளம்பும் முன், இந்த எளிய வழிமுறைகளை ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளவும்.
1. அனைவரும் செய்ய வேண்டியவை மற்றும் கொண்டு வர வேண்டியவை
உங்களுக்கு வேறு ஏதேனும் உடல்நலப் பாதிப்புகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், கீழே உள்ளவற்றைத் தவறாமல் செய்யவும்:
தற்போது சாப்பிட்டு வரும் மருந்துகளின் பரிந்துரைச் சீட்டு (Prescription), மாத்திரை அட்டைகள் அல்லது மருந்துகளின் பெயர் மற்றும் அளவுகளை எழுதி கொண்டு வரவும்.
நீங்கள் தைராய்டு, வலி, அலர்ஜி அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொண்டிருந்தால், மருத்துவமனைக்கு வந்தவுடன் எங்கள் குழுவினரிடம் தெரிவிக்கவும்.
உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணர் மருத்துவரின் தொலைபேசி எண்ணை கைவசம் வைத்திருக்கவும்.
2. குறிப்பிட்ட உடல்நலப் பாதிப்புகள் உள்ளவர்களுக்கான வழிமுறைகள்
உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் (BP) இருந்தால்
உங்கள் வழக்கமான BP மாத்திரைகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். தவிர்க்க வேண்டாம்.
காலை வீட்டிலேயே BP பரிசோதனை செய்து அதன் அளவை குறித்துக் கொள்ளுங்கள்.
சிகிச்சைக்கு 3 மணி நேரத்திற்கு முன்பு காபி, டீ அல்லது எனர்ஜி பானங்களைத் தவிர்க்கவும்.
உங்களுக்குச் சர்க்கரை நோய் இருந்தால்
உங்கள் வழக்கமான காலை அல்லது மதிய உணவைச் சாப்பிட்டு வரவும். வெறும் வயிற்றில் வர வேண்டாம்.
அப்பாயிண்ட்மென்ட் இருக்கும் நாள் காலை இரத்தச் சர்க்கரை அளவைப் பரிசோதிக்கவும்.
சமீபத்திய HbA1c ஆய்வக அறிக்கையை (3 மாத சராசரி சர்க்கரை அளவு) கொண்டு வரவும்.
உங்களுக்கு இதயப் பாதிப்பு இருந்தால்
இதய மருந்துகள் அல்லது இரத்தத்தை நீர்க்க வைக்கும் மருந்துகளை உங்கள் இதய நிபுணர் கூறாமல் நிறுத்த வேண்டாம்.
பல் சிகிச்சைக்கான உங்கள் இதய நிபுணரின் மருத்துவ அனுமதி கடிதத்தை கொண்டு வரவும்.
3. வீட்டிலிருந்து கிளம்பும் முன்
உங்கள் அப்பாயிண்ட்மென்ட் நேரத்திற்கு 10–15 நிமிடங்கள் முன்னதாக வரவும். இது எங்கள் மருத்துவக் குழுவினர் உங்கள் உடல்நிலையைப் பரிசோதித்து பாதுகாப்பான சிகிச்சையைத் திட்டமிட உதவும்.


